தமிழ் சினிமா

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

பிரபல இசை அமைப்​பாள​ரான இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உரு​வாக்​கிய தனது முதல் சிம்​பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார்.

ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்​சிக்​குச் சிறப்​பான வரவேற்பு கிடைத்​தது. இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை, இளை​ய​ராஜா படைத்தார்.

          

இந்​நிலை​யில், சென்​னை​யில் மே 30-ம் தேதி ‘வேலியன்ட்​’சிம்​பொனி இசை நிகழ்ச்​சி நடத்த உள்​ள​தாக இளை​ய​ராஜா அறி​வித்​துள்​ளார். ‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் நடை​பெறும் இந்த நிகழ்ச்​சி​யில், சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு இசைக்​கலைஞர்​கள் பங்​கேற்று நேரலை​யாக இசைக்க உள்​ளனர். இந்​நிகழ்ச்சி நடை​பெறும் இடம் உள்ளிட்ட விவரங்​கள் விரை​வில் அறிவிக்​கப்பட இருக்​கிறது.

SCROLL FOR NEXT