கயாடு லோஹர் நடித்துள்ள ‘ஐ அம் கேம்’, ‘இம்மார்டல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ‘இம்மார்டல்’ படத்தின் விளம்பரப் பணிகளில் பெரிதாகக் கலந்துகொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. அது குறித்து காயடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ஐ அம் கேம்’ பட விளம்பரத்துக்காக ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் கொடுக்க முடிந்தது. அதனால் அதில் பங்கேற்றேன். ‘இம்மார்டல்’ குழுவினரிடம் அந்த தேதி இல்லை. சூர்யாவுடன் ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றதால் அதன் புரமோஷனில் பங்கேற்க முடியவில்லை. கிளாமராக நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.
பெண்களைத் தேவையற்ற முறையில் போகப் பொருளாகச் சித்தரிப்பதை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆனால், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவை என்றால் அந்தக் கதாபாத்திரம் நம்பகமானது என நான் கருதினால், குறிப்பிட்ட எல்லை வரை நடிப்பேன்.
மற்றபடி, கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் அப்படிப்பட்ட விஷயங்களைச் செய்வதில் விருப்பமில்லை. அது சில நேரங்களில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகலாம், ஆனால் அதில் எனக்குச் சிறிதும் ஆர்வமில்லை. அப்படிப்பட்ட படங்களுக்கு ஒருபோதும் சரி என்று சொல்லமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.