தமிழ் சினிமா

‘சிட்​டுக்​குறிஞ்சி’ படத்​தில் ஹங்கேரி இசைக்​குழு

நிலா

காதல், நகைச்​சுவை, ஃபேன்​டஸி திரைப்​பட​மாக உரு​வாகி​யுள்ள ‘சிட்​டுக்​குறிஞ்சி’யை, அறி​முக இயக்​குநர் வி.ஜே.மீனாட்சி சுந்​தரம் எழுதி இயக்​கி​யுள்​ளார்.

ரஜித், தீப்​ஷிகா, நக் ஷா சரண், வி.ஜே.பப்பு, ஜி.எம்.குமார், ராம்ஸ், ஹலோ கந்​தசாமி, தேனி முருகன், சுஜாதா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். மாரா இசை அமைத்​துள்​ளார். பிரான்​சிஸ் ராஜ்குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்​யூஷன்ஸ் சார்​பில் டி.ஜூட் ஆனந்த் தயாரித்​துள்​ளார். நவ. 27-ல் வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் படக்​குழு​வினருடன் இசையமைப்​பாளர் தீனா, இயக்​குநர் ஆர்.வி. உதயகுமார் உள்​பட பலர் கலந்​து​கொண்​டனர். இதில் இசை அமைப்​பாளர் மாரா பேசும்​போது, ‘‘ஹங்​கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்​ஹார்​மோனிக் ஆர்​கெஸ்ட்ரா போன்ற உல​கப் புகழ்​பெற்ற இசைக்​குழு​வுடன் இணைந்து இப்​படத்​துக்கு இசையமைக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. இது எனக்​குக் கிடைத்த மிகப்​பெரிய மற்​றும் அரிய வாய்ப்பு” என்​றார். இப்​படத்​துக்​காக, கொடைக்​கானல் அருகே 80 ஏக்​கர் பரப்​பளவில் கிராமம் மற்​றும் பல்​வேறு அரங்க அமைப்​பு​களை உரு​வாக்​கிப் படப்​பி​டிப்பு நடத்​தப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT