சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குள்ள’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ஆகும்.
அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இதன் பாடல் வரிகளை, கானா சல்லு எழுதியுள்ளார். விஹாஸ் நாகராஜ் இயக்கி இருக்கிறார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீஜே அருணாச்சலம் மற்றும் விஷாகா திமன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபாத் புரொடக் ஷன்ஸ் சார்பில், பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்திருக்கிறார். சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த இசை ஆல்பம் வரவேற்பைப் பெற்றுள்ளது.