தமிழ் சினிமா

சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார் விஜய்: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

ஸ்டார்க்கர்

சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார். விஜய் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். அதற்கான விஷயங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சில கட்சிகள் தவெக உடன் கூட்டணி அமைத்து விஜய் முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிகிறது.

விஜய் தலைமையிலான தவெக கட்சியினர் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், “தமிழக அரசியலில் மாபெரும் வெற்றியை பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள். விஜய் சினிமா உலகில் வெற்றி கொடி கட்டியது போல, தற்போது தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்.

எம்.ஜி.ஆர் வழியில் விஜய் சினிமா துறையில் இருந்து முதல்வராக மாபெரும் சரித்திரம் படைத்து, சரித்திர நாயகனாக உருவெடுத்துள்ளார். விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

SCROLL FOR NEXT