“எனது வார்த்தைகளில் பாதி உண்மையாகிவிட்டது, மீதிக்கு நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது நான் மிகுந்த ‘குஷி’யில் இருக்கிறேன்,” என்று விஜய்யின் வெற்றி குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். இதற்காக தமிழ் திரையுலகினர் தொடங்கில் பல்வேறு திரையுலகினர் தொடர்ச்சியாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கியவரும், பல்வேறு படங்களில் விஜய்யுடன் நடித்தவருமான எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தள பதிவில், “'வாரிசு' படப்பிடிப்பின்போது, ”தமிழக அரசின் சிறந்த நாயகன் விருதை விரைவில் உங்கள் கையாலேயே பெற விரும்புகிறேன், சார்,” என்று உங்களிடம் கூறினேன்.
எனது வார்த்தைகளில் பாதி இப்போது உண்மையாகிவிட்டது; மீதிப் பாதியையும் நிஜமாக்கி, 'சிறந்த நாயகன்' என்பதை நிரூபித்து, அந்த விருதை உங்கள் கையாலேயே பெறுவதற்கு நான் இனி கடுமையாக உழைக்க வேண்டும்,
நண்பா சார்! இந்த மாபெரும் வெற்றிக்கு விஜய் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இப்போது மிகுந்த ’குஷி’யில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.