விஜய்யின் வெற்றி தற்செயலாக அமையவில்லை: அனுபம் கெர் புகழாரம்

விஜய்யின் வெற்றி தற்செயலாக அமையவில்லை: அனுபம் கெர் புகழாரம்
Updated on
1 min read

இந்த அளவிலான விஜய்யின் வெற்றி ஒருபோதும் தற்செயலாக அமைவதில்லை என்று மூத்த நடிகரான அனுபம் கெர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். இதற்காக தமிழ் திரையுலகினர் தொடங்கி பல்வேறு திரையுலகினர் தொடர்ச்சியாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இந்திய திரையுலகின் மூத்த நடிகரான அனுபம் கெர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் இந்த மகத்தான வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். இந்த அளவிலான வெற்றி ஒருபோதும் தற்செயலாக அமைவதில்லை. இது மக்களின் உறுதி, இணைப்பு மற்றும் நம்பிக்கையின் வெற்றி. அளவற்ற மக்களின் அன்பினால், திரையுலக ஜாம்பவான்கள் தலைவர்களாக உருவெடுக்கும் ஒரு வளமான பாரம்பரியம் தமிழ்நாட்டில் உள்ளது.

மேலும், இந்த தருணம் அந்தப் பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த தொடர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய மாபெரும் மக்கள் ஆதரவைப் பெற்று, அதை ஒரு ஆணையாக மாற்றியிருப்பது, மக்களுடனான உங்களுடைய பயணத்தையும், பிணைப்பையும் பறைசாற்றுகிறது. மாநிலத்திற்குச் சேவை செய்யவும், தேசத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உங்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் படைப்பாற்றல் கிடைக்க வாழ்த்துகிறேன். இந்தப் புதிய அத்தியாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தையும், ஊக்கமளிக்கும் தலைமையையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார் அனுபர் கெர்.

விஜய்யின் வெற்றி தற்செயலாக அமையவில்லை: அனுபம் கெர் புகழாரம்
சங்க உறுப்பினர்கள் வெற்றி: தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in