தமிழ் சினிமா

‘ஹைக்கூ’ முதல் பார்வை வெளியீடு

சல்மான்

ஹரிஹரன் ராம் இயக்​கிய ‘ஜோ’, சீனு ராம​சாமி இயக்​கிய ‘கோழிப்​பண்னை செல்​லதுரை’ ஆகிய திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மான ஏகன், அடுத்து நடிக்​கும் படத்தை யுவ​ராஜ் சின்​ன​சாமி இயக்​கு​கிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர் அருளானந்து மற்​றும் மேத்யூ அருளானந்து தயாரிக்​கின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீதே​வி, மலை​யாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதா​நாயகி​களாக நடிக்கும் இப்​படத்​தின் தொடக்க விழா சமீபத்​தில் நடந்​தது.

இந்​நிலை​யில் தயாரிப்பாளர் மேத்யூ அருளானந்​து​வின் பிறந்த நாளை முன்​னிட்டு படத்தின் தலைப்​பை​யும் முதல் தோற்​றப் போஸ்டரையும் படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி இப்​படத்​துக்கு ‘ஹைக்​கூ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலை​யாள மொழிகளில்​ உரு​வாகிறது.

SCROLL FOR NEXT