தமிழ் சினிமா

‘திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ - இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

தமிழினி

சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பால் இன்று (சனிக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவுக்கு, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்

இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பதிவில், “பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இனிமையான இசையமைப்பாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ்த் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஆளுநர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கானா பாடல்களுக்காகப் புகழ்பெற்ற இவர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT