தமிழ் சினிமா

அஜித்​தின் ரேஸிங் தொடர்பாக உருவாகும் ஆவணப் படம் ‘கிளாடியேட்டர்ஸ்’

செய்திப்பிரிவு

நடிகர் அஜித்​கு​மார், குட் பேட் அக்லி படத்​துக்​குப் பிறகு ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கத்​தில் மீண்​டும் நடிக்க இருக்​கிறார். அப்​படம் பற்​றிய அறி​விப்பு இன்​னும் வெளி​யாக​வில்​லை.

இந்​நிலை​யில் அவர் இப்​போது ரேஸிங்​கில் கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​காக அஜித்​கு​மார் ரேஸிங் என்ற சொந்த அணியை வைத்​துள்​ளார். இதன் மூலம் பல்​வேறு நாடு​களில் நடக்​கும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். சில போட்​டிகளில் பரிசுகளை​யும் பெற்​றுள்​ளார்.

அவரது ரேஸிங் தொடர்​பாக ஆவணப் படம் ஒன்று உரு​வாகி வரு​கிறது. அதற்கு கிளாடியேட்​டர்​ஸ் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. ஏ.எல்​.​விஜய் இயக்​கும் இந்த ஆவணப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார்​ இசை அமைத்​துள்​ளார்​.

விரை​வில்​ வெளிவர இருக்​கும்​ இந்​த ஆவணப்​ படத்​தின்​ மோஷன்​ போஸ்​டர்​ வெளி​யிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT