மறுவெளியீட்டு படங்களில் ‘கில்லி’ படத்தின் வசூலை ‘படையப்பா’ முறியடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று வெளியான படம் ‘படையப்பா’. இதற்காக ரஜினி அளித்த பேட்டி உள்ளிட்டவற்றை வைத்து விளம்பரப்படுத்தினார்கள். இப்படத்தினை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டார்கள். அப்படம் விஜய்யின் ‘கில்லி’ படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ‘படையப்பா’ படத்தின் ஒட்டுமொத்த வசூல் ‘கில்லி’ படத்தின் வசூலை முறியடிக்கவில்லை. ‘கில்லி’ படம் மறுவெளியீட்டில் பங்கு தொகையாக 10 கோடி வரை கிடைத்தது. ‘படையப்பா’ படத்தின் மறுவெளியீட்டு வசூல் இறுதியாக 5 முதல் 6 கோடி வரை தான் வசூலிக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் மறுவெளியீட்டு படங்களின் வசூலில் ‘கில்லி’ படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ‘படையப்பா’ இடம்பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வசூல் ஒப்பீட்டை முன்வைத்து ரஜினி - விஜய் ரசிகர்கள் இணையத்தில் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.