தமிழ் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், ‘டூரிங் டாக்கீஸ் ஃபிரேம் அண்ட் ஃபேம்’ திரைப்பட விருது விழா, இன்று (ஜன.25) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள், இயக்குநர் உள்பட 50 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடுவர் குழு தலைவராக கே.பாக்யராஜ், நடுவர்களாக இளவரசு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, குஷ்பு ஆகியோர் விருது பெறுபவர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
நடிகர்கள் தனுஷ், ரவிமோகன், விஜய் சேதுபதி, சிவகுமார், விஜயகுமார், சுந்தர்.சி, யோகிபாபு, மணிகண்டன், துருவ் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கமல்ஹாசன் வழங்குகிறார்.