தமிழ் சினிமா

உருவாகிறது ‘டிராகன்’ 2-ம் பாகம்

ப்ரியா

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்பட பலர் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததைஅடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டாவது முறையாக மீண்டும் வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

          

அதை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள பிரதீப் ரங்கநாதன், நண்பனாக இருந்து இயக்குநராக மாறுவதற்கு சிறிது நேரம் பிடித்தது என்றும் ஆனால், இப்போது இரண்டிலும் சிறந்ததை பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு டிராகன்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

SCROLL FOR NEXT