தமிழ் சினிமா

‘பூக்கி’ படத்தை மிஸ் செய்துவிட்டு ஃபீல் பண்ணாதீர்கள்: விஜய் ஆண்டனி

ஸ்டார்க்கர்

‘பூக்கி’ படத்தை மிஸ் செய்துவிட்டு, ஃபீல் பண்ணாதீர்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து வெளியாகியுள்ள படம் ‘பூக்கி’. இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

இதனிடையே விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில், “நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளேன்.

‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தவர்களிடம் கேளுங்கள், மிஸ் பண்ணாமல் பாருங்கள். அப்புறம் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் மிஸ் செய்துவிட்டோம் என ஃபீல் பண்ணாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனையாகிவிட்டன. ஆனால், திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷன், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பூக்கி’. இதற்கு எடிட்டிங் மற்றும் இசை உள்ளிட்ட பணிகளையும் கவனித்து தயாரித்திருந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்துக்குப் பிறகு சசி இயக்கத்தில் உருவாகி வரும் ‘நூறு சாமி’ படத்தினை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT