தமிழ் சினிமா

‘லவ்வர் பாய்’ படம் மூலம் இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோ ஆனார்

நிலா

பிரம்​மாண்ட இயக்​குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறி​முக​மாகும் படம், ‘லவ்வர் பாய்’.

கிருத்தி ஷெட்டி நாயகி​யாக நடிக்​கும் இப்​படத்தை அறி​முக இயக்குநர் அசோக்குமார் இயக்​கு​கிறார். இவர் அட்​லி​யிடம் பணியாற்றிய​வர். சுதன் சுந்​தரத்​தின் பேஷன் ஸ்டூடியோஸ், வெங்கட் கே நாராயணா​வின் கேவிஎன் புரொடக் ஷன்​ஸுடன் இணைந்து தயாரிக்​கிறது.

இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்குநர்​கள் ஷங்​கர், ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், ஹெச்​.​வினோத், அபிஷன் ஜீவிந்த்​, த​யாரிப்​பாளர்​கள் லலித் குமார், பைவ்​ஸ்​டார் செந்​தில், நடிகை அதிதி ஷங்​கர் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

தயாரிப்​பாளர் சுதன் சுந்​தரம் கூறும்​போது, “பேஷன் ஸ்டூடியோ மூலம், வளர்ந்து வரும் திறமை​யாளர்​களை​யும் தரமான கதைகளை​யும் தொடர்ந்து ஆதரித்து வரு​கிறோம். ‘லவ்​வர் பாய்’ கதையைக் கேட்​ட​போதே இயக்​குநர் அசோக்​கு​மார் மீது நம்​பிக்கை வந்​து​விட்​டது. பார்​வை​யாளர்​களுக்​கும் இந்​தக்கதை நிச்சயம் மறக்க முடி​யாத அனுபவத்​தைக் கொடுக்​கும்” என்​றார்.

SCROLL FOR NEXT