இயக்​குநர் ரவி அரசு

 
தமிழ் சினிமா

த​யாரிப்பு நிறு​வனம் தொடங்கினார் இயக்​குநர் ரவி அரசு

நிலா

அதர்வா நடித்த ‘ஈட்​டி’ படத்​தின் மூலம் இயக்​குந​ராக அறிமுகமானவர் ரவி அரசு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்​றிய இவர், தொடர்ந்து ‘ஐங்​கரன்’ என்ற படத்​தை​யும் இயக்கினார்.

அடுத்து விஷால் நடிப்​பில் உரு​வாகி வரும் ‘மகுடம்’ படத்தை இயக்கிய அவர், விஷாலுடன் ஏற்​பட்ட கருத்​து ​வேறு​பாடு காரணமாக அந்​தப் படத்​தில் இருந்து வில​கி​னார். இந்​நிலை​யில் அவர் ‘பைவ் சி’ஸ் பிலிம்​ஸ்’ என்ற தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​நிறு​வனம், நான் இயக்​கும் திரைப்​படங்​களைத் தயாரிப்​ப​தோடு மட்​டுமல்​லாமல், வளர்ந்து வரும் இளம் திரைப்​படப் படைப்​பாளி​களை​யும் ஊக்குவிக்​கும் வகை​யில் செயல்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT