தமிழ் சினிமா

“விஜய் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” - இயக்குநர் சேரன் உருக்கம்

ஸ்டார்க்கர்

தவெக தலைவர் விஜய் மீது தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

தமிழக தேர்தல் முடிவுகளுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த இயக்குநர் சேரன் இப்போது வெளியிட்ட பதவில், “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.

உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான். எந்தக் கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்தப் பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித் தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

SCROLL FOR NEXT