தமிழ் சினிமா

“அன்​பால்​தான் தமிழக முதல்வர் ஆனார் விஜய்” - ‘தினந்​தோறும்’ நாகராஜ் கருத்து

நிலா

‘தினந்​தோறும்’ நாகராஜ் இயக்​கி​ உள்ள ‘ஆகா​யம்’ படத்​தில் ஸ்ரீராம் கார்த்​திக், லிஷா மிராணி, ஷீலா, கனி​கா, சந்​தான பார​தி, ஜெயப்​பிர​காஷ், கிரி துவாரகிஷ் என பலர் நடித்​துள்​ளனர். டெல்டா டாக்​கீஸ் சார்​பில் ஜெயச்​சந்​திரன், கார்த்​திகா தேவி தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு கார்த்​திக் நல்​ல​முத்து ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

ரகுநந்​தன் இசை அமைத்​துள்​ளார். இப்​படத்​தின் பாடல் வெளியீட்டு விழா சென்​னை​யில் நேற்று நடந்​தது. படக்குழுவினருடன் இயக்​குநர்​கள் ஆர்​.​வி.உதயகு​மார், பேரரசு, சசி, சேரன், அஜயன் பாலா, தயாரிப்​பாளர் டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் நாக​ராஜ் பேசும்​போது, “என்​னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்​குச் சென்று மீண்​டும் திரும்பி வர நினைப்​பவர்​கள் எல்லா துறை​களி​லும் இருக்​கிறார்​கள். இந்தப் படத்​தில் ‘குடி உள்ளே போனால் குடும்​பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்​கிறது. குடித்​தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்​சினை வரும், குடும்​பம் இரண்​டாகும்.

அதனால் குடியை கொண்​டாட வேண்​டிய விஷய​மாகப் பார்க்கக்கூ​டாது. அதே நேரத்​தில் தவறி​விட்ட ஒரு​வர் மீண்​டும் எழுந்து வர வேண்​டும் என்ற எண்​ணத்​துக்​கும் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​கும் இந்​தப் படம் ஒரு குரலாக இருக்​கும். என்​னால் மீண்​டும் வர முடிந்​தது என்​றால், என்னைப் போல பலராலும் முடி​யும் என்று நம்​பு​கிறேன்.

இதில் குடியைப் பற்​றிப் பேசுவது கதை​யாகவோ, விளம்​பரமாகவோ, போரடிக்​கும் வகை​யிலோ இருக்​காது. ஓர் அழகான காதல் கதைக்​குள், வாழ்க்​கைக்கு பயனுள்ள சிறிய விஷயமாகத்தான் அது இருக்​கும். அதே​போல் அரசி​யலும் இந்​தப் படத்​தில் இருக்​கிறது. ஆனால் இந்​தப் படம் அன்​பைப் பற்​றித்​தான் பேசுகிறது. அன்​பால் தான் விஜய் தமிழகத்​தின் முதல்​வ​ரா​னார். அந்த அன்​பைத்​தான் ‘ஆகா​யம்’ பேசுகிறது” என்​றார்.

SCROLL FOR NEXT