மீண்டும் படம் ஒன்றை இயக்க தனுஷ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘இட்லி கடை’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ‘கர’ மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனிடையே, அடுத்து தான் இயக்கவுள்ள படத்தின் கதையையும் முடிவு செய்து வைத்துள்ளார் தனுஷ்.
நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நடிக்க மிருணாள் தாகூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் தனுஷ். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, இந்த புதிய படத்தையும் இயக்கி முடித்துவிட முடிவு செய்துள்ளார் தனுஷ்.
முன்னதாக தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை மிருணாள் தாகூர் மறுத்திருந்தார். தற்போது இருவரும் இணைந்து படத்தில் பணிபுரிய பேச்சு நடப்பது குறிப்பிடத்தக்கது.