தமிழ் சினிமா

ரவிமோகனின் ‘தாம் தூம்’ ஏப்ரல் 10 ரீ-ரிலீஸ்!

செய்திப்பிரிவு

சென்னை: ரவி மோகன் நடித்த ‘தாம் தூம்’ திரைப்படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்போடு வரும் ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

          

மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தி நடிகை கங்கனா ரணாவத் இப்படத்தின் மூலமே தமிழில் அறிமுகமானார்.

அவருடன் ராய் லக்‌ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.முருகன் ஃபிலிம் ஃபேக்டரி கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் இப்படத்தை மீண்டும் வெளியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT