அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘டிமான்ட்டி காலனி’. இதில் அருள் நிதி நாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 2ம் பாகம் வெளியானது. இதில் அருள் நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது இதன் 3ம் பாகம் உருவாகியுள்ளது.
இதில் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்.11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.