பிரித்விராஜின் ‘டாய்ரா’ முதல் விமலின் ‘சண்டக்காரி’ வரை இந்த வாரம் பல வித்தியாசமான படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அதன் பட்டியல் இது.
என்ன விலை: சஜீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘என்ன விலை’. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், கமலேஷ் ஜெகன், விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா சிவகுமார், மோகன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ் படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வைப்: குணால் கெம்மு இயக்கி நடித்திருக்கும் இந்தி படம் ‘வைப்’. இந்தப் படத்தில் குணாலுடன் ஸ்பார்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரீத்தி ஜிந்தா, வன்ஷிகா திர், யாஷ்பால் சர்மா, சர்மிளா தாகூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
டாய்ரா: மேஹ்னா குல்சர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்திப் படம் ‘டாய்ரா’. இந்தப் படத்தில் கரீனா கபூர், ப்ரித்விராஜ் சுகுமாரன், பரமோத் சங்கீ உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
தி டார்க் ஹெவன்: பாலாஜி இயக்கத்தில் வெளியாக இருக்கும் தமிழ் படம் ‘தி டார்க் ஹெவன்’. இந்தப் படத்தில், சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் ஜானகிராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்: ஷ்யாமின் கிரீஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த மலையாளப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷரஃபுதீன், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்.18-ம் தேதி வெளியாகிறது.
பாரிஸ் கஃபே: சரஜ் சீலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தமிழ் படம் ‘பாரிஸ் கஃபே’. இதில் குரு சோமசுந்தரம், அனுமோல் கே மனோகரன், விஜய் விஸ்வா, நயனா சாய், சாய் விக்கி, பிபின் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
ஹப்பி ஜர்னி: அபிராம் நாயுடு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘ஹப்பி ஜர்னி’. இந்தப் படத்தில் அன்னபூர்ணியம்மா, ஆமணி, ஜான்சி, பயல் ராதா கிருஷ்ணன், ஜினிஷா அலிஷெட்டி, ரூபா ஸ்ரீனிவாஸ், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
சண்டக்காரி: ஆர்.மாதேஷ் இயக்கி இருக்கும் படம் ‘சண்டக்காரி’. விமல், ஷ்ரேயா சரண், பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தமிழ் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
டாஸ்: அர்ஜுன் கபிகாட் இயக்கி நடித்து உள்ள இந்தக் கன்னடப் படத்தில், சுதேஜ் ஷெட்டி, நவீன் டி பாடில், அரவிந்த் போலார், போஜராஜ் வாமன்ஞ்சூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.
L&O லா அண்ட் ஆர்டர்: ரஞ்சித் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த மலையாளப் படத்தில் பிரகாஷ் வர்மா, அபிராமி, ரிதுதேவ் அய்யப்பன், ஷெர்ஷா ஷெரிஃப் உள்ளிட்டோருடன் சிறப்பு தோற்றத்தில் மம்முட்டியும் நடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
அனிரீக்ஷித அதிதிகலு: மனோஜ் அன்னையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னடப் படம் அனிரீக்ஷித அதிதிகலு. இந்தப் படத்தில் விவேக் சிம்ஹா, மைத்ரி ஜக்கி, சம்ப்ரதி ஆல்வா, தயா பல்லவகெரே, ஸ்ரீ தத்தா, தெய்விக் நாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
பீப்: எல்.சண்முக சுந்தர் இயக்கி இருக்கும் படம் ‘பீப்’. இந்த தமிழ் படத்தில் ராகவ், பிரேர்ணா கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓட்டம் துள்ளல்: ஜி.மார்தாண்டன் இயக்கி இருக்கும் படம் ‘ஓட்டம் துள்ளல்’. இப்படத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், விஜயராகவன், ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சஜோன், டினி டாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.