தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அங்கீகாரம்’. ஜேபி. தென்பாதியான் இயக்கும் இதில், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண் முருகன் இணைந்து தயாரிக்கின்றனர். இதில், ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டிரெய்லர் வெளியாகி பாராட்டுப் பெற்று வருகிறது.
“தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத் துறையின் அவலங்களையும் பேசும். இப்படத்துக்காக ரூ.75 லட்சம் செலவில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என படக்குழு தெரிவித்துள்ளது.