அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ‘கான் சிட்டி’ படத்தை ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
“நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையைப் பேசும் இப்படம், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகியுள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாகஉள்ளது. தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.