தமிழ் சினிமா

விற்​பனை பிர​தி​நி​தி​களின் வாழ்வியலை பேசும் ‘கோல்ட் கால்’

நிலா

தம்பிதுரை இயக்​கத்​தில், சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ்​, சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்​திரன், வி. ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘கோல்ட் கால்’. ஜி.என்​.சர​வணன் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப்​படத்​துக்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்​திருக்​கிறார். வாக் த்ரோ என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் கேசவ மூர்த்தி தயாரித்​துள்ள இப்படம், செப்​.18-ல் வெளி​யாகிறது.

படம் பற்றி இயக்​குநர் தம்​பிதுரை கூறும்​போது, “விற்​பனை பிரதிநி​தி​களின் வாழ்​வில் நடை​பெறும் சம்​பவங்​களை நகைச்​சுவை​யாகச் சொல்​லும் படம் இது. விற்​பனை பிர​தி​நி​தி​களான 4 நண்​பர்​களுக்​குள் ஏற்​படும் காதல், மோதல், காமெடி ஆகியவற்றைப் பொழுது​போக்கு அம்​சங்​களு​டன் சொல்லி இருக்கிறோம்” என்​றார்.

SCROLL FOR NEXT