‘நாய் சேகர்’ படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார், எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’. இதில் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் நிவாஸ், மகாவீர் அசோக் தயாரித்துள்ளனர். இப்படம், டிச. 24-ல் வெளியாகவுள்ளது.
படம் பற்றி கிஷோர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. ‘ஃபீல் குட்’ படமாக இருக்கும். ஜோடிப் பொருத்தம் குறித்து பேசும் இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 29 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளோம். தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்குப் பஞ்சம் இல்லாத வகையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.