தமிழ் சினிமா

கேமரா துறை: குழுவினரின் படிநிலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 55

சி.ஜெ.ராஜ்குமார்

திரைப்​பட உரு​வாக்​கத்​தில் ஒரு காட்​சியை உயிர்ப்​புடன் திரையில் கொண்டு வரு​வதில் ஒளிப்​ப​திவாளரின் பங்கு முதன்​மையானது. அவரது காட்​சிப்​பார்​வையைச் செயல்​படுத்​து​வதற்​குப் பின்​னால் கேமரா துறை, ஒளியமைப்​புக் குழு மற்​றும் உதவி இயக்​குநர்​கள் ஒருங்​கிணைந்து செயல்​படு​கின்​றனர். இதில் ஒளிப்​ப​திவாளர், கேமரா அசிஸ்​டென்ட்​டுகள் மற்​றும் அவருடன் தொடர்ந்து பணி​யாற்​றும் கேம​ராமேன் குழு​வினரின் பொறுப்​பு​கள் தனித்​துவமானவை.

ஒளிப்​ப​திவாளரின் பொறுப்புகள்: ஒரு திரைப்​படத்​தின் காட்​சி​யமைப்பு, ஒளி​யின் தன்மை, வண்​ணத் தோற்​றம், கேமரா கோணங்​கள், லென்ஸ் தேர்வு மற்​றும் கேமரா இயக்​கம் ஆகிய​வற்​றைத் தீர்​மானிப்​பவர் ஒளிப்​ப​திவாளர்.

இயக்​குநரின் நோக்​கத்​தைப் புரிந்​து​கொண்டு, கதையின் உணர்​வு​களுக்கு ஏற்ற காட்​சிமொழியை உரு​வாக்​கு​வது இவரது முக்​கியப் பொறுப்பு.

திரைப்​பட உரு​வாக்​கத்​தின் முன் தயாரிப்​புக் கட்​டத்​தில் லொக்​கேஷன் ரெக்கி (Location Recce) கேமரா மற்​றும் லென்ஸ் தேர்வு, ஒளியமைப்​புத் திட்​ட​மிடல் ஆகிய​வற்​றில் ஈடு​படும் ஒளிப்​ப​திவாளர் படப்​பி​டிப்​பின்​போது கேமரா மற்​றும் ஒளியமைப்​புக் குழு​வினருக்கு வழிகாட்டி, ஒவ்​வொரு ஷாட்​டுக்​கும் தேவை​யான காட்​சித் தரத்தை உறுதிசெய்​வார். திரைப்​படப் படப்​பி​டிப்பு முடித்து பின் தயாரிப்​புப் பணிகள் நடக்​கும் கட்​டத்​திலும் கலர் கிரேடிங் மற்​றும் இறுதிக் காட்​சித் தோற்​றம் தொடர்​பான முடிவு​களி​லும் பங்​கேற்​பார்.

கேமரா அசிஸ்​டென்ட்​டுகள்: கேமரா உபகரணங்​களைத் தயார் நிலை​யில் வைத்​தல், பராமரித்​தல் மற்​றும் படப்​பி​டிப்​பின்​போது அவை தடை​யின்​றிச் செயல்​படுவதை உறுதிசெய்​தல் ஆகியவை இவர்​களின் முக்​கியப் பணிகள். கேமரா பாடி, லென்​ஸுகள், ஃபில்​டர்​கள், மீடியா கார்​டுகள், பேட்​டரி​கள் மற்​றும் பிற துணைக்​கரு​வி​களை ஒழுங்குபடுத்​து​வார்​கள்.

கேமரா குழு​வின் கட்​டமைப்​பைப் பொறுத்து, முதல் உதவியாளர் ஃபோகஸ் புல்​லராக (1st AC/Focus Puller) செயல்​பட்டு நடிகர்​களின் அசைவு​களுக்கு ஏற்ப துல்​லிய​மான ஃபோகஸைப் பராமரிப்​பார். 2-ம் உதவியாளர் (2nd AC) கிளாப்​பர் போர்டு, மீடியா மேலாண்மை, லென்ஸ் மாற்​றங்​கள் மற்​றும் கேமரா அறிக்​கைகள் போன்ற பணிகளை மேற்​கொள்​வார்.

இவர்​கள் பொது​வாகத் தயாரிப்பு நிறு​வனத்​தின் ஒப்​பந்​தம் மற்​றும் படப்​பி​டிப்பு அட்​ட​வணைக்கு ஏற்​பவே பணி​யமர்த்​தப்​படு​கின்​றனர். சிலர் தினக்​கூலி அடிப்​படை​யிலும் பணிபுரிவார்​கள்; சிலர் நீண்​டகால ஒப்​பந்​தங்​களி​லும் இருப்​பார்​கள். இவர்​களின் முக்​கியப் பொறுப்பு கேமரா அமைப்​பின் தொழில்​நுட்​பச் செயல்​பாடுகளைச் சீராக வைத்​திருப்​ப​தாகும்.

கேம​ராமேன் குழு: ஒளிப்​ப​திவாள​ருடன் தொடர்ந்து பணி​யாற்​றும் பிரத்​யேகக் குழு, அவர் வேலை செய்​யும் பாணி​யையும் காட்​சிப்​பார்​வையையும் நன்கு புரிந்​து​கொண்டு செயல்​படும். அதன் கட்​டமைப்பு திரைப்​படத்​துக்​கும் ஒளிப்​ப​திவாளரின் பணி செய்​யும் முறைக்​கும் ஏற்ப மாறு​படலாம்.

இயக்க ஒளிப்​ப​திவாளர் (Operative Cameraman): ஒளிப்​ப​திவாளர் மற்​றும் இயக்​குநரின் வழிகாட்​டுதலின்​படி கேம​ராவை நேரடி​யாக இயக்கி, காட்​சிக்​குத் தேவை​யான நகர்​வு​கள், ஃபிரேமிங் மற்​றும் கேமரா செயல்​பாடுகளை மேற்​கொள்​பவர். இந்​தப் பத​வி​யின் பொறுப்​பு​கள் தயாரிப்​புத் தரப்​புக்கு ஏற்ப மாறு​படலாம்.

இணை ஒளிப்​ப​திவாளர் (Associate Cameraman): ஒளிப்​ப​திவாள​ருக்கு ஆதர​வாக கேமரா மற்​றும் ஒளியமைப்​புப் பணிகளை ஒருங்​கிணைக்​கிறார். கேஃபர், எலக்ட்​ரீஷியன்​கள் மற்​றும் ஆர்ட் டிபார்ட்​மென்ட் ஆகியோ​ருடன் தொடர்​பு​கொண்டு, ஒளி​யின் திசை, செட் அமைப்பு மற்​றும் படப்​பி​டிப்​புத் தயார்​நிலை ஆகிய​வற்​றைக் கவனிக்​கிறார். சில தயாரிப்​பு​களில் இந்​தப் பொறுப்​பு​கள் வேறு பத​வி​களு​டன் பகிரப்​படலாம்.

கேம​ராமேன் உதவியாளர் (Cameraman Assistant): மூத்த குழு​வினரின் வழிகாட்​டுதலின்​படி Flags, Diffusion Materials மற்​றும் ஒளியைக் கட்​டுப்​படுத்​தும் உபகரணங்​களை அமைப்​ப​தில் உதவுவார். லென்ஸ், ஃபில்​டர், கேமரா அமைப்பு மற்​றும் ஒளி யமைப்பு தொடர்​பான குறிப்​பு​களைப் பதிவு செய்​வதிலும் பங்​கேற்​கலாம்.

இந்த நிரந்​தரக் குழு​வினர் ஒளிப்​ப​திவாள​ருடன் நீண்​டகாலம் பணி​யாற்​று​வதன் மூலம் ஒளியமைப்பு, காட்​சிக் கட்​டமைப்பு மற்​றும் தொழில் ​நுட்​பத் திட்​ட​மிடல் ஆகிய​வற்​றில் அனுபவம் பெறுகின்​றனர். இது அவர்​களின் எதிர்​கால ஒளிப்​ப​திவுப் பயணத்​துக்​கும் உதவு​கிறது.

ஒளிப்​ப​திவாளர், ஒவ்​வொரு திரைப்​படத்​தின் தேவைக்​கும், படப்​பி​டிப்​பின் தன்​மைக்​கும் ஏற்ப, இயக்க ஒளிப்​ப​திவாளர் (Operative Cameraman), இணை ஒளிப்​ப​திவாளர் (Associate Cameraman) மற்​றும் உதவி ஒளிப்​ப​திவாளர்​கள் (Assistant Cameramen) ஆகியோரின் பணிப் பொறுப்​பு​களைத் தீர்​மானிப்​பார்.

சில நேரங்​களில், ஒரு காட்​சி​யைப் பட​மாக்​கு​வதற்கு 6 கேம​ராக்​களுக்​கும் மேல் தேவைப்​படலாம். அத்​தகைய சூழலில், ஒளிப்​ப​திவாளர் தலை​மையில் அனைத்​துக் கேமரா குழு​வினரும் ஒருங்​கிணைந்து பணி​யாற்​று​வார்​கள். எனினும், ஒவ்​வொரு கேம​ரா​வும் எந்​தக் கோணத்​தில், எந்​தக் காட்​சிப் பகுதி​யைப் பட​மாக்க வேண்​டும் என்​ப​தற்​கான பொறுப்​பு​கள், அந்​தந்த நபரின் தனிப்​பட்ட திறமை, அனுபவம் மற்​றும் செயல்​திறன் ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் ஒளிப்​ப​திவாளரால் தீர்​மானிக்​கப்​படும்.

காலநிலை, சூரியப் பாதை மற்​றும் ஒளித் தொடர்ச்சி வெளிப்​புறப் படப்​பி​டிப்​பு​களில் சூரியனின் பாதை மற்​றும் காலநிலை மாற்​றங்​கள் முக்​கியச் சவால்​களாக அமை​கின்​றன. ஒளிப்​ப​திவாளர் மற்​றும் கேமரா குழு​வினர் சூரியன் எந்த நேரத்​தில் எந்​தத் திசையில் ஒளி தரும் என்​பதை முன்​கூட்​டியே கணித்து, படப்​பி​டிப்பு நேரத்​தைத் திட்​ட​மிடு​கின்​றனர். தேவைக்​கேற்ப என் டி ஃபில்​டர்ஸ் (ND Filters), டிஃபியூசன் பிரேம்ஸ் (Diffusion Frames) மற்​றும் செயற்கை விளக்​கு​களும் பயன்​படுத்​தப்​படுகின்​றன.

மேகமூட்​டம், மழை அல்​லது திடீர் வெளிச்ச மாற்​றங்​கள் ஏற்​படும் போது, காட்​சி​யின் எக்​போஸர் (Exposure) மற்​றும் லைட்​டிங் பாலன்ஸ் (Lighting Balance) மாறாமல் இருக்​கக் குழு விரைவாகச் செயல்​படு​கிறது. வெவ்​வேறு நேரங்​களில் அல்​லது நாட்​களில் எடுக்​கப்​படும் ஒரே காட்​சி​யின் ஷாட்​டுகளுக்கு இடையேயான ஒளித் தொடர்ச்​சி​யைப் பராமரிப்​ப​தும் அவ​சி​யம்.

உதவி இயக்​குநர்​களு​டன் ஒருங்​கிணைப்பு: உதவி இயக்​குநர் குழு தயாரிக்​கும் படப்​பி​டிப்பு அட்​ட​வணைக்கு ஏற்ப கேமரா குழு தனது பணிகளைத் திட்​ட​மிடு​கிறது. குறிப்​பாக, பகல் வெளிச்​சத்​தைச் சார்ந்த காட்​சிகளைச் சரியான நேரத்​தில் பட​மாக்கி முடிப்​ப​தற்​காக முதன்மை உதவி இயக்​குநருடன் (1st AD) இணைந்து செயல்​படு​கிறது.

லென்ஸ் மாற்​றம், கிரேன் அமைத்​தல், பெரிய டிஃபியூசன் பிரேம்ஸ் (Diffusion Frames) நிறு​வுதல் போன்​றவற்​றுக்​குத் தேவை​யான நேரத்தை முன்​கூட்​டியே தெரி​விப்​ப​தன் மூலம் படப்​பி​டிப்பு அட்​ட​வணை​யைச் சீராக வைத்​திருக்க உதவு​கிறது.

தொழில்​நுட்ப மாற்​றங்​களால் தாமதம் ஏற்​படும்​போது, அடுத்​தடுத்த காட்​சிகளின் வரிசையை மாற்​று​வது குறித்து உதவி இயக்​குநர் குழு​வுடன் கேமரா குழு ஆலோ​சித்து முடிவெடுக்​கும்.

ஒளிப்​ப​திவாளர் திரைப்​படத்​தின் காட்​சிமொழியை உரு​வாக்குகிறார்; கேமரா உதவியாளர்​கள் கேம​ராவின் தொழில்​நுட்​பச்செயல்​பாட்டை உறுதிசெய்​கிறார்கள்; உதவி கேம​ராமேன் குழு காட்​சிப்​ பார்​வையை நடைமுறைப்​படுத்​து​வதிலும் ஒளியமைப்பை ஒருங்​கிணைப்​ப​திலும் துணை நிற்​கிறது.

காலநிலை மாற்​றங்​கள், ஒளித்​தொடர்ச்சி மற்​றும் படப்​பி​டிப்பு அட்​ட​வணை போன்ற சவால்​களை அனைவரும் ஒருங்​கிணைந்து எதிர்​கொள்​வதன் மூலமே திரைப்​படத்​தின் காட்​சித் தர​மும் படப்​பி​டிப்​பின் செயல்​திறனும் உறுதி செய்​யப்​படுகின்றன.

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT