தமிழ் சினிமா

த​யாரிப்​பாளர் முரளி மீது காசோலை மோசடி வழக்கு

செய்திப்பிரிவு

சன் பிக்​சர்ஸ் தயாரிப்​பில் வெளி​யான ‘பேட்ட’ மற்​றும் ‘காஞ்​ச​னா-3’ ஆகிய திரைப்​படங்​களின் வெளி​நாட்டு உரிமை​களை பெற்​றுத்​தரு​வ​தாக, மறைந்த இயக்​குநர் ராம நாராயணனின் மகனும், தேனாண்​டாள் பிலிம்ஸ் உரிமை​யாள​ரு​மான முரளி ராம​சாமி, மலேசி​யா​வில் உள்ள மாலிக் ஸ்ட்​ரீம் கார்ப்​பரேஷன் என்ற நிறு​வனத்​திடம் ஒப்​பந்​தம் செய்​துள்​ளார்.

இதற்​காக, 2018-ம் ஆண்டு மாலிக் ஸ்ட்​ரீம் கார்ப்​பரேஷன் ரூ.30 கோடியை முரளிக்கு வழங்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால் ஒப்​பந்​தப்​படி அந்த இரு படங்​களின் வெளி​நாட்டு உரிமையை அவர் அந்த நிறு​வனத்​துக்​குப் பெற்​றுத்​தர​வில்லை என்​ப​தால் வாங்​கிய தொகை​யில் ரூ.15 கோடியை மட்​டும் திருப்பி கொடுத்​துள்​ளார்.

மீதித்​தொகை​யான ரூ.15 கோடியை திருப்பி கொடுக்​க​வில்லை எனக்​கூறி மலேசிய நிறு​வனம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், முரளி மீது வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்​நிலை​யில், ரூ.10 கோடிக்கு முரளி அளித்த காசோலை பணமின்றி திரும்​பிய​தால் அவருக்கு எதி​ராக மாலிக் ஸ்ட்​ரீம் கார்ப்​பரேஷன் நிறு​வனம் சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் காசோலை மோசடி வழக்​குத்​ தொடர்ந்​துள்​ளது.

SCROLL FOR NEXT