கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
நாயகியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளார். செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரோபி, பி.வாசு, ஏ.வெங்கடேஷ், வ.ஐ.ச.ஜெயபாலன், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு, டிராஃப்ட் பை ஜிகேபி என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். சஞ்சய் முத்துக்குமார் வி, இணை தயாரிப்பு செய்துள்ளார். ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். அரசியல் பின்னணியுடன் உருவாகும் இப்படத்தின் தலைப்பு டீஸரை நடிகர் ஆர்யா, இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளனர்.