‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நடித்துள்ள வெற்றி, கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பிளாக் கோல்டு’. ஆக் ஷ்ன் திரில்லர் படமான இதை தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ளார். பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம்எம் ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி வழங்கும் இப்படத்துக்கு சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார்.
“ஓர் இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் இப்படத்தின் கதை. நம் வாழ்வில் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு விஷயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதைப் புதுமையான கதைக்களத்தில் சொல்லும் படம் இது” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.