தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? - ‘ஹிண்ட்ஸ்’ தரும் ஹெச்.வினோத்

ஸ்டார்க்கர்

’பகவந்த் கேசரி’ ரீமேக்கா ‘ஜனநாயகன்’ என்ற கேள்விக்கு இயக்குநர் ஹெச்.வினோத் பதிலளித்துள்ளார்.

ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படம் ‘பகவந்த் கேசரி’ ரீமேக் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி மழுப்பலாகவே பதிலளித்திருந்தார். தற்போது இந்த ரீமேக் விவகாரம் தொடர்பாக ஹெச்.வினோத்தும் பதிலளித்துள்ளார்.

‘ஜனநாயகன்’ தொடர்பாக ஹெச்.வினோத் கூறும்போது, “இந்தக் கதை ‘பகவந்த் கேசரி’படத்தின் ரீமேக்கா அல்லது அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் எடுத்திருக்காங்களா என்பதை பற்றியெல்லாம் படம் பார்க்க வருபவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இது விஜய் படம்.

‘இது ரீமேக் படம், பிறகு திரும்ப ஏன் நான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கும். முதல் காட்சி முடிவடைந்துவிட்டால், அதற்கான விடை தெரிந்துவிடும். படத்தின் ட்ரெய்லர் வெளியானாலே அனைவருக்கும் தெரியவரும்.

இந்த ரீமேக் விஷயத்தில் என்னால் ‘ஆம்’ என்று சொல்ல முடியாது. ‘இல்லை’ என்று சொல்ல முடியாது” என பதிலளித்துள்ளார் ஹெச்.வினோத். ஜனவரி 3-ம் தேதி மாலை ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT