சென்னை: பிரபுதேவா - வடிவேலு இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 'மனதை திருடிவிட்டாய்', 'எங்கள் அண்ணா' போன்ற படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து இருவரும் ஒன்றிணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கியுள்ளார். ஸோம்பி கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஒரு கற்பனையான உலகத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. டீஸரில், பிரபுதேவா அதிரடி ஆக்ஷன் அவதாரத்திலும், வடிவேலு ஆதிவாசி தோற்றத்திலும் தோன்றுகின்றனர். இருவருக்கும் இடையிலான காம்பினேஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் டீஸரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹெச்.சி.வேணு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகும் 'பேங் பேங்' திரைப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடிவேலுவின் ரீ-என்ட்ரியில் இந்த படம் அவருக்கு மற்றொரு முக்கிய கம்பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையும் இந்த ஹிட் காம்போ திரையரங்குகளில் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் எனத் தெரிகிறது.