அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கியுள்ள திரைப்படத்துக்கு ‘பாதாம்கீர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் சிவகுமார், ஆன் ஷீத்தல் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரொமான்டிக் காமெடி படமான இதை லார்ட்ஸ் பி தி இன்டர் நேஷனல் புரொடக் ஷன்ஸ் சார்பில் பிரதீப் ஜோஸ்.கே தயாரித்துள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
“குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுது போக்கு படமாக இது இருக்கும். படப்பிடிப்பு முடிந்து, இறுதிக் கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் டீஸர் வெளியிடப்படும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.