தமிழ் சினிமா

சத்யா சிவா இயக்கத்தில் ‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் ‘அறிவு’

ப்ரியா

சத்யா சிவா இயக்கத்​தில், உறியடி விஜய்​கு​மார், கயல் ஆனந்தி நடிக்​கும் படம் ‘அறிவு’. மூவிட்​ரோன் நிறு​வனம் சார்​பில் சாய்​வினோத் ஜெயக்​கு​மார் தயாரிக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு பூஜை​யுடன் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

இதில் ஐ. எம்​.​விஜயன், சிங்​கம்​புலி, தீபா சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். டி.இ​மான் இசையமைக்​கிறார். ஒளிப்​ப​திவை தில் ராஜு மேற்​கொள்​கிறார்.

பெண் உரிமை​களை மைய​மாக கொண்டு வலு​வான சமூகச் செய்​தி​யுடன் உரு​வாக​வுள்ள இதன் படப்​பிடிப்பு இடுக்​கி, தேனி மற்​றும் சென்னை ஆகிய பகு​தி​களில் நடை​பெற இருக்​கிறது. படம் குறித்த மற்ற தகவல்​கள் விரை​வில் வெளி​யாக இருக்​கின்றன.

          
SCROLL FOR NEXT