தமிழ் சினிமா

தீபாவளி வெளியீட்டுக்கு திட்டமிடப்படும் ‘அரசன்’?

ஸ்டார்க்கர்

‘அரசன்’ படத்தினை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதற்குள் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பினை ஒரே கட்டமாக முடித்து, தீபாவளிக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. இதற்காக பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.

          

இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

’அரசன்’ படத்தின் கதை, ‘வடசென்னை’ கதை நடைபெற்ற காலத்திலேயே நடப்பது போன்று வடிவமைத்துள்ளார் வெற்றிமாறன். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தினை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு.

SCROLL FOR NEXT