திருச்சியில் விஜய் தொகுதியில் ‘சர்ப்ரைஸ் வாக்கிங்’ வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, காந்தி மார்க்கெட் பாலக்கரை பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொள்கையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, காந்தி மார்க்கெட் பாலக்கரை பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொள்கையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

படங்கள்- ர.செல்வ முத்துகுமார்

Updated on
2 min read

திருச்சி: திருச்சியில் இன்று (புதன் கிழமை) காலை காந்தி மார்க்கெட் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார்.

திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நேற்று திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். நேற்று இரவு சாலை வழியாக திருச்சி வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலையில் ஸ்டாலின் நடைபயிற்சியுடன் கூடிய வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாம் என்ற தகவல் இருந்தது. ஆனால் அது அமைச்சர் நேருவின் தொகுதியா அல்லது அன்பில் மகேஸின் தொகுதியா என்பதில் குழப்பம் இருந்தது.

இந்நிலையில் உண்மையிலேயே ஒரு ‘சர்ப்ரைஸ் விசிட்’ ஆக காந்தி மார்க்கெட் பகுதியை ஸ்டாலின் வலம் வந்தார்.

அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின்

நகர்வலம்: முன்னதாக காலை 6:30 மணி அளவில் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து கிளம்பிய முதல்வர் ஐயப்பன் கோயில், கண்ட்டோன்மென்ட், பீமநகர், பாலக்கரை, மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட்டை சென்றடைந்தார். அவருடன் மூன்று பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே உடன் சென்றன. மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லை.

காந்தி மார்க்கெட் மிளகாய் மண்டி அருகே காரை விட்டு இறங்கிய அவர் அங்கு தரைக்கடை வைத்துள்ள பெண்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தபடியே நடந்து சென்றார். மேலும், பெண்கள் தன்னிடம் கூற விரும்புகின்ற கருத்தை நின்று நிதானமாக கேட்டார்.

பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

இதனால் உற்சாகமடைந்த பெண் ஒருவர் “நீங்கள் இருக்கும் வரை எங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை” என்றார். மற்றொரு பெண்மணி “எங்க சாமி தரையில் வந்துருச்சு” என்றார். அவரை அமைச்சர் நேருவும், மகேஸும் சமாதானப்படுத்தினர்.

காந்தி மார்க்கெட் பிரதான வாயில், தஞ்சாவூர் சாலை வழியாக காந்தி மார்க்கெட்டுக்குள் சென்றார். மீண்டும் அதே வழியில் வெளியே வந்த ஸ்டாலின் பாலக்கரை ரவுண்டானா வரை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

விஜய் தொகுதி: நடைபயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை நடத்திய ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தான் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். ஸ்டாலின் தற்போது நடைப் பயிற்சியுடன் கூடிய வாக்கு சேர்ப்பில் ஈடுபட்ட தொகுதி திருச்சி கிழக்கு தொகுதி. இத்தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார் அதைவிட முக்கியமாக தவெக தலைவர் விஜய் இத்தொகுதியில் தான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலக்கரை பரக்கத் டீக்கடையில் டீ குடித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

பாலக்கரை பரக்கத் டீக்கடையில் டீ குடித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அரை கப் டீ: ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்யும் இடத்தில் பிரபலமான டீக்கடை ஒன்று உள்ளது. இந்த டீக்கடையில் அவருக்கு அரை கப் டீ அரை சர்க்கரை போட்டு கொடுக்கும்படி அவரது பாதுகாவலர்கள் வாங்கி கொடுத்தனர். அதை அமர்ந்து உற்சாகமாக குடித்த ஸ்டாலின், அதன் பிறகு காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்றார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, காந்தி மார்க்கெட் பாலக்கரை பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொள்கையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in