நடிகை ப்ரீத்தி அஸ்ராணி
விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அப்பா குட்டி’. மு.மாறன் எழுதி இயக்கியுள்ளார்.
நவ.20-ல் வெளியாகும் இப்படம் பற்றி நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கூறும்போது, “அப்பா குட்டி எனக்குத் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம். இயக்குநர் மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தெளிவான பார்வையுடன் உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் இருக்கின்றன.
அம்மாவின் அன்பைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவிடம் உடனடியாகப் பேசுவார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய கதாபாத்திரம் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது. இந்தப் படம் அப்பா – மகள் உறவை மட்டும் பேசும் படமாக இருக்காது” என்றார்.