தமிழ் சினிமா

செப்​.25-ல் வெளி​யாகிறது ‘அன்பில் அவன்’

நிலா

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்​துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்​கி​யுள்​ளார். கவுதம் ராஜேந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்​துள்​ளார்.

ஐங்​கரன் இன்​டர்​நேஷனல் மற்​றும் ஹேப்பி ஹை பிக்​சர்ஸ் சார்​பில் கே. கருணா​மூர்த்​தி, அசோக் செல்​வன், அபிநயா செல்​வம் ஆகியோர் இணைந்து தயாரித்​துள்​ளனர். “காதல் கதைக்களத்துடன், அழகான உணர்​வு​களை​யும் கலந்​து, சிறந்த பொழுது​போக்கு திரைப்​பட​மாக இது உரு​வாகி​யுள்​ளது. செப்​.25-ல் வெளியாகும் இப்​படத்​தின் கதையை ‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா எழு​தி​யுள்​ளார்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT