தமிழ் சினிமா

பெரம்பூர் பின்​னணி​யில் ‘அன்பே டயா​னா’

செய்திப்பிரிவு

‘ஜமா’ பாரி இளவழகன் இயக்​கி, நடித்​துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு என பலர் நடித்​துள்​ளனர். பரத் சங்​கர் இசையமைத்துள்​ளார். நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்யா கரிகாலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

சென்​னை​யின் பெரம்பூர் பகு​தி​யைப் பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இந்​தத் திரைப்​படம், வெவ்​வேறு கலாச்​சா​ரப் பின்னணி​யைச் சேர்ந்த இரு​வரின் காதலை மைய​மாகக் கொண்​டது. வடசென்னை மிடில்​கிளாஸ் குடும்ப வாழ்க்​கை, காதல் மற்​றும் நகைச்​சுவை கலந்த சம்​பவங்​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் வெளி​யீட்​டுத் தேதி​யைப் படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி ஜூலை 17-ல் வெளி​யாகிறது.

SCROLL FOR NEXT