தமிழ் சினிமா

‘ஆல்​பாஸ்’ பார்த்​தால் மன அமைதி கிடைக்கும்: ஜேம்ஸ் வசந்​தன்

நிலா

வடசென்னை மக்​களின் வாழ்​வியலைப் பேசும் ‘ஆல்​பாஸ்’ படத்தை மைதீன் இயக்​கி​யுள்​ளார். இதில், துஷ்யந்த், ஜனனி, லியோ, ஜெயப்​பிர​காஷ், சரத் லோகிதஸ்​வா, செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோ​தினி உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

ஒன் ஸ்டெப் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் மோக​னா.ஆர் தயாரித்​துள்​ளார். ஜேம்ஸ் வசந்​தன் இசை அமைத்​துள்ள இப்படத்துக்கு தில் ராஜு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் இசை, டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் ஆர்​.​வி.உதயகு​மார், விக்​ரமன், தயாரிப்​பாளர் தனஞ்​செயன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

விழா​வில் ஜேம்ஸ் வசந்​தன் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் அனைத்து கலைஞர்​களும் அற்​புத​மாக உழைத்​துள்​ளார்​கள். நான் அனைத்​துப் படங்​களை​யும் மனதுக்கு நெருக்​க​மாகப் பார்ப்​பேன். சில படங்​களைப் பார்க்​கும்​போது, ஏன் இவ்​வளவு வன்​முறை எனத் தோன்​றும். ஆனால் இந்​தப்​படம் பார்க்​கும் போது உங்​களுக்கு எந்த கேள்​வி​யும் தோன்​றாது. மன அமைதி கிடைக்​கும்.

இப்​படத்​தின் கலை இயக்​குநருக்​குத் தேசிய விருது கிடைக்​கும். அந்​தளவு உழைத்​திருக்​கிறார். இப்​படத்​தில் என்​னுடன் பணியாற்றிய அனைத்து இசைக் கலைஞர்​களுக்​கும் என் நன்றிகள். வடசென்​னையை யாரும் காட்​டாத கோணத்​தில் இயக்குநர் காட்​டி​யுள்​ளார். இப்​படம் கண்​டிப்​பாக அனை​வருக்​கும் பிடிக்​கும்” என்​றார்.

SCROLL FOR NEXT