ஜெய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 29-வது படத்துக்கு ‘ஏஜிஎஸ் 29’ எனத் தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், ராஜீவ் மேனன், ஜி.எம்.சுரேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் முதல் தோற்றம், பிரியங்கா மேகனின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், ‘ஏஜிஎஸ் 29’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது எனக் கூறி, பூஜை தொடங்கி, படப்பிடிப்பு, நிறைவு வரையிலான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு பணியையும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணியையும் மேற்கொள்கிறார்கள். படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.