தமிழ் சினிமா

‘மூன்வாக்’ பட ‘ஏத்து’ பாடலுக்கு ஆப்பிரிக்க இசைக்குழு நடனம்!

செய்திப்பிரிவு

பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலா தரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்​துள்​ளார்.

பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்​.ரஹ்​மான் பாடி​ உள்​ளார். இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

          

அதில் பிரபுதேவா கடின​மான நடன அசைவு​களை எளி​தாக ஆடி ரசிக்க வைத்​துள்​ளார். இப்​பாடல் வெளி​யான 2 வாரங்​களி​லேயே யூடியூப்​பில் 11 மில்​லியன் பார்​வை​களைக் கடந்​துள்​ளது. இப்​பாடலுக்​கு, ஆப்​பிரிக்​கா​வின் பிரபல​மான ‘ஹைபர்ஸ் கிட்ஸ் ஆப்பி​ரிக்​கா’ என்ற குழந்​தைகள் இசைக்​குழு, நடன​மாடி வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளனர். இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் அந்த நடனத்தை வரவேற்று பதிலளித்​துள்​ளார். அந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது.

SCROLL FOR NEXT