நடிகை வடிவுக்​கரசி

 
தமிழ் சினிமா

“எனக்கு மறு​வாழ்வு...” - ‘கான் சிட்​டி’ பட விழாவில் வடிவுக்கரசி உருக்கம்

நிலா

அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரங்​களில் நடித்த படம் ‘கான் சிட்​டி’. இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஷ் துரை​ராஜ் இயக்​கியுள்ளார். ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரும் நிலை​யில் படக்​குழு​வின் நன்றி அறி​விப்பு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படத்​தில் பணி​யாற்​றிய​வர்​கள் பங்கேற்​றனர்.

நடிகை வடிவுக்​கரசி பேசும்​போது, “நான் இன்று உங்​கள் முன் நிற்பதே மறு​பிறவி கிடைத்​தது​போல. எனக்கு மறு​வாழ்வு கிடைக்க உதவிய​வர்​கள், ராஜ்கு​மார் சேதுப​தி, ஸ்ரீப்​ரி​யா, சுஹாசினி, மணி ரத்​னம், கார்த்​திக், சூர்​யா, ரஜினி​காந்த், கமல்ஹாசன், ஏ.சி.எஸ். சண்​முகம், சரத்​கு​மார், ராதிகா உள்​ளிட்ட பலர். அவர்​கள் பல லட்​சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்​தார்​கள்.

இன்று நான் உங்​கள் முன்​னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை வாழ்​நாள் முழு​வதும் மறக்க மாட்​டேன். ‘கான் சிட்​டி’ திரைப்​படத்​தின் 25-வது நாள் வெற்றி விழா​வில் இருப்​பது மிகுந்த மகிழ்ச்​சியை அளிக்​கிறது. நான் திரை​யுல​கில் நடிக்​கத் தொடங்​கிய காலத்​தில், 25 வாரங்​கள், 50 வாரங்​கள், 100 நாட்​கள், 175 நாட்​கள் என படங்​கள் ஓடி வெற்றியை கொண்​டாடி​னார்​கள்.

இன்று 25-வது நாள் விழா​வாக இருந்​தா​லும், இந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்​கிறது. நான் அதி​க​மாக யூடியூப் பார்ப்​ப​தில்​லை. ஆனால் இந்​தப் படம் வெளி​யான பிறகு பல விமர்​சனங்​களை​யும், ரசிகர்​களின் கருத்​துகளை​யும் பார்த்​தேன். பல ஆண்​டு​களுக்​குப் பிறகு, ‘வடிவுக்​கரசி அம்மா மிகச் சிறப்​பாக நடித்​திருக்​கிறார்’ என்று பலரும் எழு​தி​யிருந்​தார்​கள்.

அவை மிகுந்த மகிழ்ச்​சி​யை​யும் உற்​சாகத்​தை​யும் அளித்​தன. ‘வடிவுக்​கரசி ரஃபாக மட்​டுமே பேசு​வார்’ என்ற எண்​ணத்தை உடைத்​து, நகைச்​சுவை கதா​பாத்​திரம் கொடுத்​து, ரசிகர்​களிடம்​ புதிய வரவேற்​பைப்​ பெற்​றுத்​ தந்​திருக்​கிறார்​ இயக்​குநர்​. அவருக்கு என்​ மன​மார்​ந்​த நன்​றி” என்​றார்​.

SCROLL FOR NEXT