நடிகை உமா

 
தமிழ் சினிமா

நடிகை உமாவுக்கு புற்​று​நோய் சிகிச்சை

நிலா

தமிழில், சொக்​கத்​தங்​கம், கடல்​பூக்​கள், தென்​றல், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் உமா. மலையாளம், கன்​னடம், தெலுங்கு படங்​களி​லும் நடித்​துள்​ளார்.

2006ம் ஆண்டு துஷ்​யத் என்​பவரைத் திரு​மணம் செய்து கொண்ட அவர், திரு​மணத்​துக்குப் பிறகு நடிக்​க​வில்​லை. நடிகை சுமித்ராவின் மகளான இவர் மார்​பகப் புற்​று​நோ​யால் பாதிக்கப்பட்​டு, அதற்​காகச் சிகிச்சை மேற்கொண்டு வரு​கிறார்.

இந்​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருப்​பதை சில வாரங்​களுக்கு முன் அறி​வித்த அவர், இப்​போது வெளி​யிட்​டுள்ள பதி​வில், “கீமோ மற்றும் இம்​யூனோ சிகிச்​சை​யின் 2-ம் கட்​டத்​தில் இருக்​கிறேன். ஒவ்​வொரு நாளை​யும் கடந்து வரு​கிறேன். சிரம​மான நாட்​களை எப்​படிக் கையாள்​வது என்​ப​தைக் கற்​றுக் கொள்​கிறேன். அதேவேளை, உடல் வலிமை​யுடன் உணரும் நாட்​களைக் மகிழ்ச்சியுடன் கொண்​டாடு​கிறேன்.

எப்​போதும் எனக்​குத் துணை​யாக நிற்​கும் என் குடும்​பத்​தா​ருக்​கும் அன்பு மற்​றும் ஆதரவு காட்​டும் ரசிகர்​களுக்​கும் நன்​றி. சிகிச்சையைத் தொடர்ந்து மேற்​கொள்​கிறேன், குணமடைந்து வரு​கிறேன், முன்​னேற்​றத்​தில் கவனம் செலுத்​துகிறேன். அது முழுமை​யான​தாக இல்லா விட்​டாலும், உண்​மை​யானது” என்று தெரி​வித்​துள்​ளார். அவர் விரை​வில் குணமடைய ரசிகர்​கள் அவருக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT