நடிகை ஷாஷா சிவகு​மார்

 
தமிழ் சினிமா

‘என்ன விலை’யில் கற்​றல் அனுபவம்: நடிகை ஷாஷா சிவகுமார்

நிலா

சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள ‘என்ன விலை’ படத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் செப்​.17-ல் வெளி​யாக இருக்கிறது.

ராமேஸ்​வரம் அருகே கடலில் பக்​தர்​கள் காணிக்​கை​யாகச் செலுத்​தும் நாண​யங்​களை மீட்​டெடுத்து வாழும் ஒரு​வரின் கதையை மைய​மாகக் கொண்​டது இப்​படம். இதில் நடித்த அனுபவம் பற்றி ஷாஷா சிவகு​மார் கூறும்​போது, “இதற்கு முன் ரத்னம், லவ் ஓ லவ் உள்பட சில படங்​களில் நடித்​திருக்​கிறேன். நான் ஆர்க்​கிடெக்ட். நடிப்பு ஆசை​யால் சினி​மாவுக்கு வந்துவிட்டேன். என்ன விலை படத்​தில் மணிமேகலை என்ற கதாபாத்​திரத்​தில் நடித்​துள்​ளேன்.

முதன்​முறை​யாகக் கிராமப்​புறப் பெண்​ணாக நடித்​திருக்​கிறேன். படப்​பிடிப்​புத் தளத்​துக்​குச் செல்​வதற்கு முன்பே இந்​தக் கதாபாத்திரத்​துக்​காக என்னை தயார்​படுத்​திக் கொண்​டேன். அது நடிப்​ப​தற்கு எளி​தாக இருந்​தது. இது எனக்கு முற்​றி​லும் மாறு​பட்ட அனுபவம்.

இதில் நடித்த கருணாஸ் அற்​புத​மான நடிகர். நிமிஷா திறமை​யானவர். அவர்​களு​டன் இணைந்து நடிக்​கும்​போது இயல்பாகவே நமக்​கும் பொறுப்​புணர்வு வந்​து​விடும். மலை​யாளத் திரை​யுல​கைச் சேர்ந்​தவர்​களு​டன் பணி​யாற்​றியது கற்​றல் அனுபவ​மாக இருந்​தது” என்​றார்​.

SCROLL FOR NEXT