தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் 100% காதல், கொரில்லா, தனுஷின் இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் தனுஷ், கீர்த்தி சனோன் நடித்து வெளியாகியுள்ள இந்திப் படமான ‘தேரே இஷ்க் மே’-வை சமீபத்தில் பார்த்துள்ளார்.
இதையடுத்து தனுஷை பாராட்டிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷின் தேரே இஷ்க் மே படத்தை பார்த்துவிட்டு 48 மணி நேரமாகத் தூங்கவில்லை. என் மனதில் அந்தப்படம் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தனுஷ், கீர்த்தி சனோனின் அழகான நடிப்பு, ரஹ்மானின் காலத்தைத் தாண்டிய இசை ஆகியவற்றுடன் இயக்குநர் ஆனந்த் எல் ராயின் மாஸ்டர் கிளாஸ் படம் இது என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.