

இயக்குநர் செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ஆயிரத்தில் ஒருவன் உள்பட சில படங்களை இயக்கினார்.
இப்போது, ‘7ஜி ரெயின்போ காலனி 2’, ‘மெண்டல் மனதில்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், 2006-ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனின் அனைத்து புகைப்படங்களையும் கீதாஞ்சலி திடீரென நீக்கியுள்ளார். இதன் மூலம் இவர்கள் பிரிய இருப்பதாகக் கூறப்படுகிறது.