நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்த ராஜவேல் ராஜ் என்பவரை மணந்தார். உறவினர்கள், நெருக்கமானவர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்பு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ‘மேயாத மான்’, ‘கடைகுட்டி சிங்கம்’, ‘பத்து தல’, ‘டிமாண்டி காலனி 2’ போன்றவை இவரின் நடிப்பில் வந்த குறிப்பிட்டதக்க படங்களாகும்.
சமீபத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து இவர் நடித்திருந்த ‘இருமுடிகட்டு’ படம் வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.
பிரியா பவானி சங்கர் தமிழில் கடைசியாக ‘ஹாட்ஸ்பாட் 2 மச்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து இவர் நடித்திருக்கும் ‘டிமாண்டி காலனி 3’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இவை தவிர, இவர் நடித்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இருக்கிறது. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 3’ படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காதலரை மணந்த பிரியா பவானி சங்கருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதள பதிவுகளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.