தனுஷ் நடித்துள்ள ‘கர’ படம் ஏப்.30ம் தேதி வெளியாக இருக்கிறது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர், தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே ‘இட்லி கடை’ படத்துக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கி நடிக்க இருக்கிறார் தனுஷ். 1960-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட இது நாயகியை மையப்படுத்தியது என்றும் அதில் மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதை மிருணாள் தாக்குர் மறுத்திருந்தார். இந்நிலையில் இருவரும் புதிய படத்தில் இணைவதாக வெளியான தகவல் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.