தமிழ் சினிமா

ஹீரோ முதல் வில்லன் வரை 11 வேடங்களில் யோகிபாபு

நிலா

யோகி பாபு 11 வேடங்களின் நடிக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். இவர், மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

9 லைட்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அதிதி ரவி நாயகியாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த பான் இந்தியா படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “பரபரப்பான காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இது.

ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது. அதன் கருப்புப் பெட்டியைத் தேடும் பயணம் தான் இந்தப் படத்தின் கதை. விபத்தின் காரணத்தைக் கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக் ஷன் கலந்து விறுவிறுப்பாகச் சொல்கிறோம்.

நாயகன் முதல் வில்லன் வரை, 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். பல்வேறு மொழிகளைப் பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இவ்வேடங்களுக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடர இருக்கிறது” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT